Saturday, September 21, 2024

காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி.. ஹரியானாவில் நடப்பது என்ன?

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி.. ஹரியானாவில் நடப்பது என்ன?காட்சிப் படம்

காட்சிப் படம்

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஹரியானா மாநிலத்தில் தற்போதுவரை பா.ஜ.க., காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே போட்டி நிலவிவருகிறது.

மாநிலத்தில் பா.ஜ.க. தொடர்ந்து இருமுறை ஆட்சியில் இருந்து வரும் நிலையில், மூன்றாவது முறையாகவும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அதேசமயம், காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் தேர்தல் வேலைகளை தீவிரக செய்து வருகின்றன. 2019ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான 46 தொகுதிகள் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத சூழலில் 40 தொகுதிகளை வென்றிருந்த பா.ஜ.க. 10 தொகுதிகளை வென்றிருந்த ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அந்தக் கூட்டணியில் முறிவு ஏற்பட்டது.

விளம்பரம்

இந்த சூழலில் தான் தற்போது ஹரியானாவில் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியும், பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதேசமயம் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்பட்டுவருகிறது. இந்தநிலையில், இதனை உறுதி செய்யும் வகையில் ஹரியானா மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பாபாரியா ஆம் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்துள்ளார்.

Also Read :
பிரதர், சென்னைல நாம எப்போ சைக்கிள் ஓட்டலாம்.. ராகுல் கேள்விக்கு ஸ்டாலின் சுவாரஸ்ய பதில்

விளம்பரம்

கூட்டணி பேச்சுவார்த்தைக் குறித்து தெரிவித்த தீபக் பாபாரியா, “அவர்களுடன் நாங்கள் பேசிவருகிறோம். இரு தரப்பினருக்கும் சாதகமான நிலைவரும் சூழலில் மட்டுமே கூட்டணியை உறுதி செய்வோம். இருவரும் பயனடையும் வகையில் பேசுகிறோம். இன்னும் ஓரிரு தினத்தில் முடிவு செய்வோம். அல்லது இதனைவிட்டுவிடுவோம். எண்கள் விளையாட்டிற்குள் நான் செல்லவில்லை. பா.ஜ.க.வை தோற்கடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு அக். 5ம் தேதி வாக்குப்பதிவும், அக். 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Aam Aadmi Party
,
Congress
,
haryana

You may also like

© RajTamil Network – 2024