காங்கிரஸ் செய்த தவறுகள் – அடுக்கும் ஆர்.எஸ்.எஸ்.

வக்ஃப் சட்டத் திருத்தம் : காங்கிரஸை சாடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு!

இந்தியாவில் கடந்த 1954ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வக்ஃப் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை முந்தைய காங்கிரஸ் அரசுகள் மேற்கொண்டன. இந்த திருத்தங்கள் அனைத்தும் அரசியல் சட்டத்திற்கு முரணானவை என்றும், ஒரு சில செல்வாக்கு மிக்க பணக்கார முஸ்லீம்களை சமாதானப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசுகள் திருத்தங்களை செய்ததாகவும், மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போது வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் முடிவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எந்த பங்கையும் வகிக்கவில்லை என்று கூறியுள்ள அவர், பல மூஸ்லீம் அமைப்புகள் மற்றும் முஸ்லீம் அறிஞர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், ஹஜ் பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்திய பிறகுதான், அதிகமான முஸ்லீம்கள் தற்போது ஹஜ் புனித யாத்திரை செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

பணக்கார முஸ்லீம்களுக்கு மட்டுமே உதவி செய்வதற்காக வழங்கப்பட்ட ஹஜ் மானியத்தை நிறுத்தியதால், அது முஸ்லீம் சமூகத்தில் எவ்வித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும், குறிப்பிட்ட செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை திருப்தி படுத்துவதற்காகவே காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக இதை செய்து வந்ததாகவும் அவர் சாடியுள்ளார்.

இதையும் படிங்க:
பிரதமர் தலைமறைவு… ராணுவ ஆட்சி… வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?

அதேபோல், 2010 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தங்கள் ஒரு சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காகவே கொண்டுவரப்பட்டது என்றும் விமர்சித்துள்ளதோடு, தற்போதைய வக்ஃப் மசோதாவை ஒரே மாதிரியான சிவில் சட்டத்திற்கு ஒரு மாதிரியாக சிலர் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதனிடையே கருத்து தெரிவித்துள்ள மற்றொரு ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர், இந்தியா போன்ற நாடுகளில் எந்தவொரு சமூகத்திற்கும் தனித்தனி சலுகைகளை வழங்கக் கூடாது என்றும், எல்லா வகையிலும் சமத்துவம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
assets
,
law
,
Muslim
,
Parliament
,
Trending News
,
Viral News
,
wakf Board

Related posts

Indian Army is developing indigenous Sensor Fuzed Munitions

State Prepares ₹1,670 Crore Plan For 1,200 Hi-Tech Fast Response Vehicles, Awaits Cabinet Approval

Overhaul: Major Surgery Likely In Police Dept Amid Rising Crime Rate; Commissioners Of Bhopal & Indore May Be Shifted