Friday, September 20, 2024

காங்கோவில் போராட்டக்காரர்கள் தாக்குதலில் 70 பேர் பலி

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

காங்கோவில் போராட்டக்காரர்கள் தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர்.

கின்ஷாசா,

காங்கோ தலைநகர் கின்ஷாசாவில் உள்ள கின்செல் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரண்டு சமூகங்களுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. நில உரிமைகள் மற்றும் அப்பகுதியின் வரலாற்று குடிமக்கள் மற்றும் காங்கோ ஆற்றின் அருகே குடியேறிய யக்கா உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இடையே நில உரிமைகள் தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் காங்கோவின் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெகெடி முன்னிலையில் போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், இரு சமூகங்களுக்கிடையில் மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளன. காங்கோ ராணுவம் வன்முறையை அடக்குவதில் தோல்வியடைந்தது. இதையடுத்து காங்கோ கிழக்கில் போராளிகள் ஆயுதங்களுடன் போரிட்டு வரும் நிலையில், நாட்டின் மேற்கு பகுதியிலும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர். இந்த பகுதியில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் போராடி வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024