காட் பிளஸ் யூ மாமே.. ‘குட் பேட் அக்லி’ புதிய போஸ்டர்!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

காட் பிளஸ் யூ மாமே.. ‘குட் பேட் அக்லி’ புதிய போஸ்டர்!நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.காட் பிளஸ் யூ மாமே.. 'குட் பேட் அக்லி' புதிய போஸ்டர்!

நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்துக்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்துக்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், குட் பேட் அக்லியின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜான் சென்றார்.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024