Saturday, September 21, 2024

கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

'மெய்யழகன்' படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு 'மெய்யழகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'மெய்யழகன்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 27-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024