Saturday, September 21, 2024

”காலனி இருக்கக் கூடாது” – கேரள அரசின் திடீர் முடிவால் நிலைமை மாறுமா?

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

”காலனி இருக்கக் கூடாது” – கேரள அரசின் திடீர் முடிவால் நிலைமை மாறுமா?”காலனி இருக்கக் கூடாது” - கேரள அரசின் திடீர் முடிவால் நிலைமை மாறுமா?

பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியை காலனி என்ற பெயரில் அடையாளப்படுத்தக் கூடாது என்றும், அந்த நடைமுறையை நிறுத்தவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சி சார்பில் வெற்றிபெற்ற ஒரே நபர் கே.ராதாகிருஷ்ணன். இதனால், எம்.பி. பதவியை தக்க வைப்பதற்காக, அவர் மாநில அரசில் வகித்து வந்த கேரள தேவசம், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்பு அவர் முக்கியமான ஓர் உத்தரவையும் பிறப்பித்தார்.

விளம்பரம்

அதாவது, பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளையும், அவர்கள் புதிதாக குடியேறும் பகுதிகளையும் காலனி என்று அழைக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதற்கு பதிலாக சங்கேதம் அல்லது ஊர் என்றே அழைக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், காலனி என்ற வார்த்தை, காலனி ஆதிக்க அடிமை மனநிலையை பிரதிபலிப்பதாக தெரிவித்தார். காலனி என்று குறுப்பிட்டாலே, அங்கு அடிமையின மக்கள் வசிப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்துவதால், அதை பயன்படுத்தக் கூடாது என்று கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

விளம்பரம்

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா போன்ற நாடுகள் இருந்த நிலையில், பிரிட்டிஷ் காலனி என்று குறிப்பிட்டதற்கு அடிமை பிம்பத்தை கட்டமைத்தே உருவாக்கப்பட்டதாகவும், மேலும், இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் நிலப் பிரபுக்கள் தங்களுக்கு கீழ் குறிப்பிட்ட காலனிகளை வைத்திருந்தனர். எனவே, காலனி என்ற வார்த்தையைக் கேட்டாலே, அது அங்கு வசிக்கும் மக்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:
பரப்புரை முதல் காங்.,வேட்பாளர் வரை… பிரியங்கா காந்தியின் அரசியல் வரலாறு!

இனிமேல், அந்த வார்த்தையை பட்டியல், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சூட்டக்கூடாது என்று கூறிய அவர், மக்களே தங்களது பகுதிக்கு புதிய பெயர்களை பரிந்துரைக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், தனி நபர்களின் பெயர்களை வைத்தால், தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், தற்போதுள்ள பெயர்களை தவிர்த்து, இனிமேல் தனிநபர்களின் பெயர்களை குடியிருப்பு பகுதிகளுக்கு சூட்ட வேண்டாம் என்று அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
kerala

You may also like

© RajTamil Network – 2024