காலாண்டு விடுமுறை மட்டுமா? அதனுடன் மகிழ்ச்சியான செய்தியும்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மதுரை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க.. பாராசிட்டமால், பான் டி உள்பட 53 மருந்துகள் தரக்கட்டுப்பாட்டுத் தேர்வில் தோல்வி!

தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழகத்தில், காலாண்டு தேர்வு விடுமுறை, செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்(?) மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்த நிலையில், மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், சுற்றுலா தலங்களுக்குச் செல்லவும், சிறப்புப் பேருந்துகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

காலாண்டு விடுமுறை தொடங்குவதையடுத்து, நாளை மற்றும் நாளை மறுநாள் கிளாம்பாக்கத்தில் இருந்து 120 பேருந்துகள் இயக்கப்படும். அதுபோல, சேலம், திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் மதுரைக்கு 75 பேருந்துகள் இயக்கப்படும்.

செப்.29 முதல் அக்.2 வரை மதுரை, திண்டுக்கல், தேனியில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு 150 பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.

சுற்றுலா செல்லும் மக்களின் நலன் கருதி, மதுரை மண்டலம் சார்பில், கொடைக்கானல், மூணாறு, கொல்லம், கோவை உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.

அனைத்து சிறப்புப் பேருந்துகளின் விவரங்களையும் இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளவும், www.tnstc.in என்ற இணையதளத்திலேயே முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும் மதுரை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024