Saturday, September 21, 2024

கால்களைப் பார்த்தே அடையாளத்தை கூறும் கேரள ஆட்டோ ஓட்டுனர்

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

ஒருவரின் கால்களைப் பார்த்தே அடையாளத்தை கூறும் கேரள ஆட்டோ ஓட்டுனர்ஆட்டோ டிரைவர்

ஆட்டோ டிரைவர்

கேரள மாநிலம் அரிம்பூரில் உள்ள ஆட்டோ ஓட்டுநரான சஜீவன் மச்சாதத் என்பவர், ஒருவரின் கால்களைப் பார்த்தே அந்த நபரை அடையாளம் காணும் திறனுக்காக சமீபகாலமாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இதை முதலில் கேட்கும் போது நமக்கே நம்பமுடியாததாகத் தோன்றலாம். ஆனால் சஜீவன் 500-க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்களை அவர்களின் கால்களை மட்டுமே பார்த்து சரியாக அடையாளம் கண்டுள்ளதாக கேரளா நியூஸ்18 கூறுகிறது. இதில் என்ன சிறப்பு என்றால், நபர்களின் அடையாளத்தை கண்டுபிடிக்கும் சமயத்தில் அவர்களின் முகத்தைப் பார்ப்பதற்காக ஒருமுறை கூட சஜீவன் முயற்சி செய்யவில்லை.

விளம்பரம்

இந்த தனித்துவ திறமையால், கேரளாவைச் சேர்ந்த இந்த ஆட்டோ ஓட்டுனர் 2011-ம் ஆண்டிலேயே லிம்கா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் தனது பெயரை இடம்பெறச் செய்துள்ளார். ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக யாருடைய கவனத்திலும் இல்லாத சஜீவன், இப்போது மீண்டும் பொது களத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறார். பொதுமக்களின் கால்களை மட்டும் பார்த்து அவர்களது பெயர்களைச் சொல்லி அனைவரையும் மகிழ்வித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுநரின் இந்த திறமையை பார்த்த அரிம்பூர் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

விளம்பரம்

500 பேரின் பெயர்களை அடையாளம் காணும் சஜேவனின் கூர்மையான நினைவாற்றலின் முதல் நிகழ்வு 2009-ம் ஆண்டு கேரளாவின் பரக்காட்டில் உள்ள அரிம்பூர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அங்கு வந்திருந்த ஒவ்வொருவரின் பெயர்களையும் பாலினம் பாராமல் அவர்களின் காலடியை ஒரு பார்வை பார்த்தே அடையாளம் காட்டி அசத்தினார். அதுமட்டுமின்றி பள்ளி உரிமையாளரின் காலணிகளை ஒரு முறை பார்த்து அவர் பெயரையும் சரியாக கூறினார்.

இதையும் வாசிக்க : பாம்புக்கும் நாகப்பாம்புக்கும் என்ன வித்தியாசங்கள் தெரியுமா..? ஆச்சரியமூட்டும் தகவல்கள் இதோ..

விளம்பரம்

இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட திரைக்குப் பின்னால் மக்கள் உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள். திரையின் முன்னால் இருந்த சஜீவன், அவர்களின் கால்களை மட்டுமே பார்த்து அவர்களின் பெயர்களைக் சரியாக கண்டுபிடித்தார். இந்த நிகழ்வின் போது வேறு எந்த தந்திரத்திலும் ஈடுபட சஜீவன் முயற்சிக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக, முன்னால் அமர்ந்திருக்கும் நபரின் கால்களைத் தவிர அவரது முழு உடலும் திரைச்சீலையால் மறைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த தந்திரத்தை செயல்படுத்துவதில் ஒரு முக்கியமான அம்சம் ஒன்றிருந்தது. இந்த ஆட்டோ ஓட்டுனர் அடையாளம் காணும் நபர்கள் அனைவருமே அவரது வாகனத்தில் சவாரி செய்துள்ளனர். அவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்ட சஜீவன், அவர்களின் கால்களை பார்த்த உடனேயே அவர்களை அடையாளம் காட்டுகிறார். பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும், சஜீவனின் அற்புதமான நினைவாற்றல் இன்னும் அப்படியே உள்ளது. மேலும் குழந்தைகளின் கால்களைப் பார்த்து அவர்களின் பெயர்களையும் அடையாளம் காண்கிறார்.

விளம்பரம்ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு மட்டுமல்ல இந்த 5 நாடுகளுக்கும் சுதந்திர தினம் தான்

நடிகர் நந்த கிஷோரின் தலைமையின் கீழ் அரிம்பூர் நகரவாசிகள் சஜீவனுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்துள்ளனர். பிரவீன் ஐபிஎஸ், லக்கி, நல்லா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நந்த கிஷோர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Auto Driver

You may also like

© RajTamil Network – 2024