கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி உலக சாதனை..!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

கால்பந்து வரலாற்றில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார்.

எம்எல்எஸ் எனப்படும் மேஜர் லீக் கால்பந்து தொடரில் மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக விளையாடுகிறார். இந்திய நேரப்படி நள்ளிரவு நடைபெற்ற இந்தப்போட்டியில் கொழும்புஸ் அணியும் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணியும் மோதின.

இந்தப் போட்டியில் 3-2 என இன்டர் மியாமி வென்றது. மெஸ்ஸி இரண்டு (45’, 45+5’) கோல்கள் அடித்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இன்டர் மியாமி அணி முதல்முறையாக எம்எல்எஸ்-இன் சப்போர்டர்ஸ் ஷீல்டு கோப்பையை வென்றுள்ளது.

இந்த சீசனில் சிறப்பாக விளையாடும் ஒரு அணிக்கு புள்ளிகளின் அடிப்படையில் சப்போர்டர்ஸ் ஷீல்டு விருது கொடுப்பது வழக்கம். 68 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் இன்டர் மியாமி அணிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இன்டர் மியாமி அணிக்கு இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமான சப்போர்டர்ஸ் ஷீல்டு கோப்பையை லாஸ் ஏஞ்சல்ஸ் யுனைடெட், டிசி யுனைடெட் அணியும் தலா 4 முறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Don Lionel Andrés Messi Cuccittini. pic.twitter.com/cSXGNiCzos

— Inter Miami CF (@InterMiamiCF) October 3, 2024

இது மெஸ்ஸியின் 46ஆவது கிளப் கோப்பையாகும். இதுவரை எந்த ஒரு வீரரும் இந்த அளவுக்கு கால்பந்து வரலாற்றில் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டர் மியாமி அணியும் மெஸ்ஸி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இதைக்கொண்டாடி வருகின்றனர்.

இந்தத் தொடரின் அரையிறுதி. இறுதிப் போட்டிகள் முறையே நவ, டிசம்பரில் நடைபெறுமென திட்டமிடப்பட்டுள்ளன.

El Supporters’ Shield pertenece a Miami ️ pic.twitter.com/UhvoAwL6gZ

— Inter Miami CF (@InterMiamiCF) October 3, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024