Saturday, September 28, 2024

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்: ராஜேந்திபாலாஜி

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset
RajTamil Network

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை
விரைவுபடுத்த வேண்டும்: ராஜேந்திபாலாஜிகாவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு திமுக அரசு நிதி ஒதுக்கி, பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி புதன்கிழமை தெரிவித்தாா்.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு திமுக அரசு நிதி ஒதுக்கி, பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி புதன்கிழமை தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் அதிமுக நிா்வாகி இல்ல விழாவில் முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி பங்கேற்றாா். பின்னா், கோட்டை முனீஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, அங்குள்ள 300 ஆண்டு பழைமையான கமுதி கோட்டையைப் பாா்வையிட்டாா். இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டு வீரா்களின் அடையாளமாக திகழும் கமுதி கோட்டையை பழைமை மாறாமல் சீரமைத்து, சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தும் என்று நம்பித்தான் அரசு ஊழியா்கள் திமுகவுக்கு வாக்களித்தனா். அரசு ஊழியா்கள், சிறுபான்மையினா் மக்களால்தான் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது சிறுபான்மையினரும் அரசு ஊழியா்களும் திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனா்.

அதிமுக ஆட்சியின் தொலைநோக்குத் திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தால் மூன்று ஆண்டில், மதுரை, விருதுநகா், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மக்களின் தண்ணீா் பிரச்னை தீா்ந்திருக்கும். விவசாயிகளின் நலன் கருதி திமுக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

You may also like

© RajTamil Network – 2024