Thursday, October 24, 2024

காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

காஸாவில் பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று (அக். 24) வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.

பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால் உடமைகளை இழந்த மக்கள் தற்காலிக கூடாரம் மைத்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒருசில இடங்களில் பள்ளிக் கூடம் போன்ற கல்வி நிலையங்களில் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஸா எல்லையில் உள்ள பள்ளியின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்த குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

டெய்ர் அல்-பாலாஹ்விலிருந்து வடகிழக்கில் அமைந்துள்ள நுசிராத் பகுதியில் அமைந்துள்ள பள்ளி மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள் அல்-அவ்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பெய்ரூட் பகுதியில் இன்று காலை இஸ்ரேல் ராணுவம் 17 ஏவுகணைகளை வீசியது. முன்னறிவிப்பின்றி நடந்த இந்த தாக்குதலில் 6 கட்டடங்கள் தரமட்டமாகின. இதில் ஒருவர் உயிரிழந்தார். 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – காஸா இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதிமுதல் நடைபெற்றுவரும் போரில், இதுவரை காஸாவில் 42,847 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100,544 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேபோன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,139 பேர் உயிரிழந்தனர். 200 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க | போரை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது -பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா்

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024