Wednesday, November 6, 2024

கிராமத்தின் பெருமையாக கருதும் ஆலமரம்: யார் நட்டது தெரியுமா?

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

மகாத்மா காந்தியால் நடப்பட்ட ஆலமரம் : கிராமத்தின் பெருமையாக கருதும் பொதுமக்கள்ஆலமரம்

ஆலமரம்

1858 முதல் 1947 வரையிலான பிரிட்டிஷ் அரசால் இந்தியாவை ஆட்சி செய்தது. அதாவது கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை ஆண்டனர். இந்த காலக்கட்டத்தில் நமது தலைவர்களும், சுதந்திரப் போராட்ட வீரர்களும் பல ஆண்டுகளாகப் போராடி நமது நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்துள்ளனர். இறுதியாக 1747 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு சுதந்திரம் கிடைத்தது. பின்னர், 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்திய போது குடியரசாக மாறியது.

விளம்பரம்

இந்த விடுதலைக்காக நாட்டில் பல சுதந்திர இயக்கங்களை நமது தலைவர்களால் ஏற்பாடு செய்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, மக்களைத் தங்கள் இயக்கங்களில் இணைத்து, கிளர்ச்சியூட்டின. இந்த இயக்கங்களின் போது, ​​ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் தங்கள் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல மரக்கன்றுகளை நட்டனர். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுளத்திற்கு இதுபோன்ற ஒரு பயணத்தின் போது, ​​அங்குள்ள ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி ஒரு ஆலமரத்தை நட்டார்.

விளம்பரம்

தற்போது அந்த ஆலமரம் மிகப்பெரிய மரமாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிரான வெள்ளையனே வெளியேறு இயக்கப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி ரயிலில் நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதேபோல் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள தூசி ரயில் நிலையத்தில் இறங்கினார். அவர் வருகையின் போது அங்கு ஆலமரம் ஒன்றை நட்டார். தற்போது அந்த ஆலமரம் மிகப்பெரிய மரமாக வளர்ந்து இரண்டு ஏக்கரில் பரவி, பல வழிப்போக்கர்களுக்கு நிழல் தருகியது.

விளம்பரம்

சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய மாவட்டங்களில் ஒன்று ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஆகும். இந்தப் பகுதியில் இருந்து பல அரசியல் தலைவர்கள் வந்திருக்கிறார்கள். அறிக்கைகளின்படி, மகாத்மா காந்தி 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது அந்த மாவட்டத்திற்கு வருகை தந்தார். காந்திஜி, அமுதாலவலச மண்டல் கிராமத்திற்குச் சென்று ரயில் நிலையத்தில் ஒரு பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்திற்கு பிறகு வெளியேறு இயக்கத்தின் ஒரு பகுதியாக, அவர் ஒரு செடியை நட்டார்.

விளம்பரம்

அந்த செடி, தற்போது பெரிய மரமாக மாறி, பழைய சட்டசபையின் சின்னமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆழமரம் கிராமத்தின் பெருமையாக கருதப்படுகிறது. இந்த மரம் மகாத்மா காந்தியால் நடப்பட்டது என்பதைக் காட்டும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
tree plantation
,
tree planted
,
tree plants

You may also like

© RajTamil Network – 2024