கிரிக்கெட்டில் சந்தித்த அனுபவம் குறித்து இந்திய வீரர் அஸ்வின் எழுதிய புத்தகம் வெளியீடு

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

இளம் வயதில் கிரிக்கெட்டில் தான் சந்தித்த சவால்கள், ருசிகர சம்பவங்கள் குறித்து அஸ்வின் புத்தகம் எழுதியிருக்கிறார்.

சென்னை,

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 100 டெஸ்ட் போட்டியில் விளையாடி 516 விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பதுடன், 5 சதம் உள்பட 3,309 ரன்களும் எடுத்துள்ளார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற அணியில் அங்கம் வகித்த அஸ்வின் இந்திய அணிக்காக 116 ஒருநாள் போட்டியும், 65 இருபது ஓவர் போட்டியிலும் விளையாடி இருக்கிறார். 37 வயதான அவர் தற்போது ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2010-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான அஸ்வின் அதற்கு முன்னதாக இளம் வயதில் கிரிக்கெட்டில் தான் சந்தித்த சவால்கள், ருசிகர சம்பவங்கள் குறித்து கிரிக்கெட் எழுத்தாளர் சித்தார்த் மோங்காவுடன் இணைந்து புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நேற்று நடந்தது. புத்தகத்தை வெளியிட்டு அஸ்வின் பேசுகையில்,

'கிரிக்கெட் வீரராக நான் உருவானது எப்படி என்பதை இந்த புத்தகத்தின் வாயிலாக பகிர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புத்தகத்தின் மூலம் ஆர்வம் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்க முடியும் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டார்.

You may also like

© RajTamil Network – 2024