நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக இழந்தது. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தத் தோல்விக்கு கோலி, ரோஹித் பேட்டிங் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.
விராட் கோலி 2021க்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் மோசமாக விளையாடி வருகிறார். சராசரி 35க்கும் கீழாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தோல்விக்கு பீட்டர்சன் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னாள் ஆஸி. வீரர் ரிக்கி பாண்டிங்கின் பொன்மொழியை பகிர்ந்துள்ளார்.
அதில், “சராசரி 35ஆக இருக்குமாறு நீங்கள் விளையாடினால் உங்களது அப்பாவிடம் சொல்லி கூடைப்பந்து அல்லது கால்பந்து விளையாட சென்றுவிடு” என அதில் எழுதப்பட்டிருந்தது.
இந்திய அணியை கிரிக்கெட் உலகில் அனைவரும் விமர்சித்து வருவது கவலையளிக்கிறது. ஆஸ்திரேலியாவுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 4 போட்டிகளில் வெல்லாவிட்டால் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது.
அதனால் இந்திய அணியும் மூத்த வீரர்களும் மிகுந்த அழுத்ததுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், “தற்போது கிரிக்கெட் என்றாலே அதிரடியாக விளையாடுவது என மாறிவிட்டது. டெஸ்ட் பேட்டிங்கிற்கான தனித்த திறமை இல்லாமல் போய்விட்டது.
சுழல்பந்து வீச்சிக்கு எதிராக நன்றாக விளையாட வேண்டுமானால் நேரமெடுத்து மணிக்கணக்காக பயிற்சி செய்தால் மட்டுமே முடியும். உடனடி தீர்வு என வேறெதுவும் இல்லை” என்றார்.