Friday, September 20, 2024

கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித் அபார பந்துவீச்சு; 115 ரன்களுக்கு ஆட்டமிழந்த அமெரிக்கா!

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித் அபார பந்துவீச்சு; 115 ரன்களுக்கு ஆட்டமிழந்த அமெரிக்கா!இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித்  அபார பந்துவீச்சு; 115 ரன்களுக்கு ஆட்டமிழந்த அமெரிக்கா!படம் | AP

இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சூப்பர் 8 சுற்றின் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அமெரிக்கா முதலில் பேட் செய்தது.

அந்த அணி 18.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதீஷ் குமார் 30 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கோரி ஆண்டர்சன் அதிகபட்சமாக 29 ரன்களும், ஹர்மித் சிங் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அடில் ரஷித் மற்றும் சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளையும், ரீஸ் டாப்ளே மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

You may also like

© RajTamil Network – 2024