கீழடியில் தங்க நாணயம் கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வின் போது ‘பூ வடிவம்’ போன்ற தங்க நாணயம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்துக்குள்பட்ட கீழடி, கொந்தகை ஆகிய இடங்களில், பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை, அகழ்வாராய்ச்சி தளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தோ்வு செய்யப்பட்ட இடத்தில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் குழிகளில் இருந்து அண்மையில் பாசி, வண்ணக் கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அகழாய்வுக் குழிகளிலிருந்து பிராமி எனப்படும் தமிழி முறை எழுத்தில் ‘தா’ என்னும் பண்டைய தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது.

இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

இந்த நிலையில், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கி.பி. 17 ஆம் நூற்றாண்டு புழக்கத்தில் இருந்த தென் இந்திய தங்க காசு என சொல்லப்படும் இந்த தங்க நாணயத்தின் ஒரு பக்கத்தில், 6 இதழ் கொண்ட பூ வடிவமும், மற்றொரு பக்கத்தில் கோடுகளால் அலங்கறிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கீழடி அகரம் பகுதியில் நடைபெற்ற 6 ஆம் கட்ட அகழாய்வு பணியின் போது கி.பி. 17 ஆம் நூற்றாண்டு புழக்கத்தில் இருந்த தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Pakistan: 7 Labourers From Multan Killed In Terrorist Attack In Balochistan’s Panjgur

Kerala Launches New Entrance Training Programme Benefiting Over 8 Lakh Students

AI Express-AIX Connect Merger In October First Week; ‘I5’ To Fly Into Sunset