குஜராத்தில் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

காந்திநகர்,

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜசல்பூர் பகுதியில் தனியார் தொழிற்சாலையின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மதியம் 1.45 மணியளவில் திடிரேன சுவர் ஒன்று இடிந்து விழுந்தது.

அந்த இடிபாடுகளுக்கு இடையே 10 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

An ex-gratia of Rs. 2 lakhs from PMNRF would be given to the next of kin of each deceased in the mishap in Mehsana, Gujarat. Rs. 50,000 would be given to those injured. https://t.co/KUJqI32dEW

— PMO India (@PMOIndia) October 12, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024