குஜராத் அல்ல; தென் கொரியாவில்! காரை விழுங்கிய திடீர் சாலைப் பள்ளம்!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

தென்கொரியா தலைநகர் சியோலில் வியாழக்கிழமை சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.

சியோலின் மத்தியப் பகுதியில் உள்ள சாலையில் 8 அடி ஆழமுள்ள திடீர் பள்ளத்தில் கார் ஒன்று சிக்கிக் கொண்டது. அந்த திடீர் பள்ளம், காரை சாய்த்ததோடு, முழுமையாக பள்ளத்துக்குள் கார் விழுந்ததைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் காருடன் பள்ளத்தில் சிக்கிய 82 வயது ஆண் ஓட்டுநரையும், 76 வயது பெண் பயணியையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக யாருக்கும் பெரிய பாதிப்பும் ஏற்படாத நிலையில், சியோலில் உள்ள சியோடேமூன் மாவட்ட தீயணைப்பு நிலையத்துக்கு காலை 11:20 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆப்கனில் நிலநடுக்கம்! தில்லி, ராஜஸ்தானிலும் நில அதிர்வு!

பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர் மற்றும் திடீர் பள்ளம் ஏற்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சம்பவம் நடந்த சியோடேமூன் பகுதி வியாழக்கிழமை மாலை வரை போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டது.

South Korea
சாலைப் பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் மீட்புப் படையினர்.

தென்கொரியாவில் 2019 முதல் ஜூன் 2023 வரை 879 திடீர் பள்ளங்கள் ஏற்பட்டதாக தென்கொரியாவின் நிலம், கட்டமைப்பு போக்குவரத்து அமைச்சகம், அந்த அமைச்சருக்கு கடந்தாண்டு தெரிவித்தது. இதில் பாதி விபத்துகள் கழிவுநீர் குழாய் பாதிப்பால் ஏற்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.

You may also like

© RajTamil Network – 2024