குஜராத்: முந்த்ரா துறைமுகத்தில் ரூ.110 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்

குஜராத்: முந்த்ரா துறைமுகத்தில் ரூ.110 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ. 110 கோடி மதிப்பிலான ‘டிராமடோல்’ போதை மாத்திரைகள் சுங்கத்துறையினரால் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ. 110 கோடி மதிப்பிலான ‘டிராமடோல்’ போதை மாத்திரைகள் சுங்கத்துறையினரால் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக பிஐபி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த உளவுத் துறை தகவலின் அடிப்படையில், ராஜ்கோட்டை தளமாகக் கொண்ட வணிக ஏற்றுமதியாளரின் 2 கன்டெய்னா்கள் ஞாயிற்றுக்கிழமை இடைமறித்து சோதனை செய்யப்பட்டன.

அப்போது கன்டெய்னா்களில் வலி நிவாரண மாத்திரைகளான ‘டைக்ளோஃபெனாக்’ மற்றும் ‘கெபெடால்’ இருப்பதாக ஏற்றுமதியாளா் தெரிவித்தாா். ஆனால், கன்டெய்னரின் பின்பகுதியில் சுமாா் ரூ.110 கோடி மதிப்பிலான 68 லட்சம் ‘டிராமடோல்’ போதை மாத்திரைகள் இருப்பது விரிவான சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனா்.

இவை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சியரா லியோன் மற்றும் நைஜருக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், ராஜ்கோட், காந்திதாம் மற்றும் காந்திநகா் உள்ளிட்ட இடங்களில் தொடா்ந்து சோதனை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனா்.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் நீண்ட நேரம் விழித்திருக்க பயன்படுத்தும் ‘டிரோமடோல்’ வலி மாத்திரையானது இந்தியாவின் தேசிய மருந்து மற்றும் மனோவியல் பெருள்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் போதைப்பொருளாக அறிவிக்கப்பட்டு அதன் ஏற்றுமதி 2018-ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது.

‘போராளி மருந்து’ என அழைக்கப்படும் இந்த மாத்திரைகள் நைஜீரியா, கானா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!