Wednesday, September 25, 2024

குஜராத் வெள்ளத்தால் குடியிருப்புக்குள் புகுந்த முதலைகள்!

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

குஜராத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலைகளை வன அதிகாரிகள் மீட்டு, ஆற்றுக்குள் விட்டனர்.

குஜராத்தின் வடோதராவில் ஆகஸ்ட் 27 முதல் 29 வரையில் பெய்த கனமழையால், விஸ்வாமித்ரி ஆற்றில் ஏற்பட்ட உயர் நீர் மட்டத்தால், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் முதலைகள், பாம்புகள் போன்றவை நுழைந்தன. விஸ்வாமித்ரி ஆற்றில், சுமார் 440 முதலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஸ்வாமித்ரி ஆற்றுக்கு அருகில் பல குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த நிலையில், அப்பகுதியில் பெய்த கனமழையால், அஜ்வா அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும்போது ஏற்பட்ட வெள்ளத்தில் 24 முதலைகள், பாம்புகள், சுமார் 40 கிலோ எடையுள்ள பெரிய ஆமைகள், முள்ளம்பன்றி உள்பட 75 பிற விலங்குகளும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பிரேஸிலில் எக்ஸ் முடக்கம்: நீதிபதியை வம்பிழுக்கும் எலான்!

அவற்றில் 14 அடி நீளமுள்ள முதலைகளும் அடங்கும். இருப்பினும், முதலைகளோ வேறு ஜீவராசிகளோ மனிதர்களைத் தாக்கவில்லை என்று கூறுகின்றனர்.

இதனையடுத்து, ஆற்றின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்த பின்பு, மீட்கப்பட்ட உயிரினங்கள் ஆற்றில் விடுவிக்கப்படும் என்று வடோதரா ரேஞ்ச் வன அதிகாரி கரன்சின் ராஜ்புத் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024