குடும்பத்தினரோடு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய முகேஷ் அம்பானி

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் கோலாகலமாக நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்… குவிந்த நட்சத்திரங்கள்!தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் கோலாகலமாக நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... குவிந்த நட்சத்திரங்கள்!

ரிலையன்ஸ் நிறுவனத் தலைவரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி வீட்டில் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாடு முழுக்க இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை மகாராஷ்டிரா மக்கள் பெரும் கோலாகலமாக கொண்டாது வழக்கம். பெரும்பாலானோர் ஒன்று முதல் ஐந்து நாட்கள் வரை விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவார்கள். ஆனால் மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி 10 நாள்களுக்கு திருவிழாவாக கொண்டாடப்படும். மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்புக்காக மொத்தம் 15,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி வீட்டில் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவர் தனது குடும்பத்தினருடன் விநாயகரை வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்திற்காக முகேஷ் அம்பானியின் ANTILIYA வீடு பல்வேறு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு புதியதாக திருமணமான அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் பூஜை செய்தனர்.

#WATCH | The Ambani family offers prayers to Lord Ganesh on #GaneshChaturthi2024, at their residence in Mumbai. pic.twitter.com/A9Q8o98pKo

— ANI (@ANI) September 7, 2024

விளம்பரம்

அதேபோல், இன்று மாலை முகேஷ் அம்பானி வீட்டில் பிரபலங்கள் கலந்துக்கொண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Ganesh Chaturti
,
mukesh ambani

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024