Thursday, September 19, 2024

குத்துச்சண்டை: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் அமித் பங்கல்

by rajtamil
0 comment 49 views
A+A-
Reset

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது.

பாரீஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்றுகள் தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்த தகுதிச்சுற்று ஒன்றில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை நிஷாந்த் தேவ் இழந்தார்.

இதற்கிடையே, மற்றொரு தகுதிச்சுற்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மால்டோவா வீரரை 5-0 என வீழ்த்தி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இடம்பிடித்தார்.

இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் ஆவார்.ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த பெண் வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (50 கிலோ), பிரீத் பவார் (54 கிலோ), லாவ்லினா போர்கோஹெய்ன் (75) ஆகியோர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர்.

இந்நிலையில், 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் வெற்றி பெற்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

You may also like

© RajTamil Network – 2024