Saturday, September 21, 2024

குமரியில் படகு சேவை தற்காலிகமாக ரத்து!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

குமரியில் படகு சேவை தற்காலிகமாக ரத்து!கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்திற்கான படகு சேவை இன்று(ஜூலை 21) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.கோப்புப்படம்.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்திற்கான படகு சேவை இன்று(ஜூலை 21) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சென்று பாா்த்து மகிழ்கின்றனா்.

இதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் காலை 8 முதல் மாலை 4 மணிவரை இடைவேளையின்றி தொடா்ச்சியாக படகுகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வாக இருப்பதால் விவேகானந்தா் நினைவு மண்டபத்திற்கான படகு சேவை இன்று(ஜூலை 21) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024