Wednesday, October 2, 2024

குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வருபவர்களை கண்காணிப்பது அவசியம்: அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுரை

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வருபவர்களை கண்காணிப்பது அவசியம்: அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுரை

சென்னை: மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு குரங்கு அம்மை பாதிப்புகண்டறியப்பட்டது. பின்னர் மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கைகளால் அந்த பாதிப்பு முடிவுக்கு வந்தது.குரங்கு அம்மை பாதிப்பு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்தும்.

காய்ச்சல், தலைவலி, உடல் வலி, உடலில் தடிப்புகள் உள்ளிட்டவை அதன்முக்கிய அறிகுறிகளாக உள்ளன.நோய் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்குபரவும் என்பதால், நோய் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

இந்நிலையில், தற்போது ஆப்பிரிக்கா, காங்கோ, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியிருப்பது தெரிய வந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்குமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகவில்லை. ஆனாலும், அண்டை நாடுகளில் அத்தகைய பாதிப்பு இருந்தால், முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்துஅறிகுறிகளுடன் தமிழகம் வருபவர்களை, மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்.

குறிப்பாக, காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

You may also like

© RajTamil Network – 2024