Friday, September 20, 2024

குரங்கு அம்மை: கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு தானியங்கி வெப்ப பரிசோதனை

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

கோவை,

குரங்கு அம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதன்எதிரொலியாக பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு இதுவரையில் இல்லை. ஆனாலும் பொது சுகாதாரத் துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையம், துறைமுகங்களில் குரங்கு அம்மை நோய் தொற்று குறித்த தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு தானியங்கி வெப்ப பரிசோதனை கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் இந்த பரிசோதனை செய்து கணக்கிடப்படுகிறது. அத்துடன் குரங்கு அம்மை குறித்த காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தடிப்புகள் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024