Saturday, September 21, 2024

குற்றவாளியின் வீடு என்பதால் இடித்துவிடுவதா? உச்ச நீதிமன்றம்

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டவரின் வீடு என்பதால் மட்டும், அதனை புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கிவிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மேலும், ஒருவர் குற்ற வழக்கில், குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டாலும்கூட, அவரது வீட்டை இடிக்கக் கூடாது என தெரிவித்திருக்கிறது.

புல்டோசர் நியாயம் என்று கூறப்படும், குற்றவாளிகளின் வீடுகளை, அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்து தகர்ப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.

இதிலும் முறைகேடா? டாப் ரேங்க் எடுத்த காவல்துறை பயிற்சி எஸ்ஐ! மறுதேர்வில்..

நாடு முழுமைக்கும் வழிகாட்டு நெறிமுறை

குற்றம்சாட்டப்பட்டவரின் வீடு மட்டுமல்ல, குற்றச் சம்பவத்தில் குற்றவாளி என தண்டிக்கப்படுபவரின் வீட்டையும் இடிக்கக்கூடாது, இது தொடர்பாக நாடு முழுமைக்குமான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும், இது சட்டத்தை மீறுவதற்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒருவரது சொத்தை எவ்வாறு இப்படி இடித்துத் தள்ள முடியும்? அவர் குற்றம்சாட்டப்பட்டவராகவோ அல்லது குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவராகவோ இருந்தாலும் கூட என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தாவே, புல்டோசர் நீதியைத் தடுக்க நாடு முழுமைக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான துஷார் மேதா, ஒருவேளை அது ஆக்ரமிப்புக் கட்டடமாக இருந்தால் மட்டுமே அகற்றப்படலாம் என்று வாதிட்டார்.

You may also like

© RajTamil Network – 2024