Monday, September 23, 2024

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு 3-வது நாளாக குளிக்க தடை

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது

தென்காசி,

குற்றாலத்தில் தற்போது சீசன் காலமாகும். இதனால் அருவிக்கு தினமும் ஏராளமாக சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அவர்கள் அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்து சென்கிறார்கள். இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். அத்துடன், போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

You may also like

© RajTamil Network – 2024