குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள மேடை அமைக்க இஸ்ரோ சார்பில் டெண்டர் கோரப்பட்டது

by rajtamil
0 comment 32 views
A+A-
Reset

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள மேடை அமைக்கும் பணிக்காக இஸ்ரோ சார்பில் டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

குலசேகரப்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் இந்தியாவின் 2-வது விண்வெளி ஏவுதள மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து ரூ.20.29 கோடி செலவில் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணி மேற்கொள்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தொழில்நுட்ப சேவை மையம், ராக்கெட் ஏவுதளம், ஏவுதள அடித்தள கட்டமைப்பு போன்றவற்றை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்ப சேவை மையம், ராக்கெட் ஏவுதள தீயணைப்பு நிலையம் மற்றும்எஸ்.எஸ்.எல்.வி. ஏவுதள மையம் ஆகிய கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் வெளியிடப்பட்டு வருகிற 22-ந் தேதி பிற்பகல் 2.30 மணி வரை ஒப்பந்தத்திற்கான ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குலசேகரப்பட்டினம் விண்வெளி மையத்தில் ராக்கெட் ஏவுதள மேடை அமைக்க இஸ்ரோ சார்பில் டெண்டர் கோரப்பட்டு உள்ளது. அதாவது, ராக்கெட் ஏவுதள மேைட, மின்சார வசதிகள், குளிர்சாதன வசதிகள் மேற்கொள்ளவும் டெண்டர் கோரப்பட்டு உள்ளது. ராக்கெட் ஏவுதள பணிகளை வருகிற 2026-ம் ஆண்டிற்குள் முடிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024