Friday, September 20, 2024

குழந்தை பருவ தோழியை கரம்பிடிக்கும் அனந்த் அம்பானி…

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

Anant Ambani-Radhika Merchant Wedding: குழந்தை பருவ தோழியை கரம்பிடிக்கும் அனந்த் அம்பானி… காதல் கதையை வெளிபடுத்திய புகைப்படம்!Anant Ambani-Radhika Merchant Wedding: குழந்தை பருவ தோழியை கரம்பிடிக்கும் அனந்த் அம்பானி... காதல் கதையை வெளிபடுத்திய புகைப்படம்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் இன்று இரவு மும்பையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் உலக தலைவர்கள் தொடங்கி பல துறை சார்ந்த அதி முக்கிய நபர்கள் வரை கலந்துகொள்கின்றனர்.

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இந்த காதல் ஜோடி, குழந்தை பருவ நண்பர்கள் என்று பல ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. அவர்களது காதல் கதையைப் பற்றி தங்களது குடும்பங்கள் பல விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், 2018ஆம் ஆண்டில் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலானபோது அனந்த்-ராதிகாவின் உறவு குறித்து பலரும் தெரிந்துகொள்ள தொடங்கினர்.

விளம்பரம்

இருப்பினும், அந்த நேரத்தில் தம்பதியினர் தங்கள் உறவைப் பற்றி வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், ராதிகா மெர்ச்சன்ட் அடிக்கடி அம்பானி குடும்பத்தின் தனிப்பட்ட முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு வந்தார். 2018-ல் நடந்த ஆனந்த் பிரமாலுடனான இஷா அம்பானியின் திருமணத்திலும், 2019-ல் ஷ்லோகா மேத்தாவுடனான ஆகாஷ் அம்பானியின் திருமணத்திலும் ராதிகா மெர்ச்சன்ட் கலந்து கொண்டார்.

2022ஆம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தானில் உள்ள நாதத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ராதிகா மற்றும் அனந்த் ஆகியோரின் ரோகா விழா நடைபெற்றது. அதன்பின்னர், அனந்த் மற்றும் ராதிகாவின் ‘கோல் தானா’ விழா ஜனவரி 19, 2023 அன்று நடந்தது. நிச்சயதார்த்த விழா அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் நடைபெற்றது. இந்த விழாவில் பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு தம்பதியை ஆசிர்வதித்தனர். இதில் ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், ஸ்ரேயா கோஷல், ராஜ்குமார் ஹிரானி மற்றும் விது வினோத் சோப்ரா ஆகியோர் அடங்குவர்.

விளம்பரம்

Also Read |
நிர்வாகப் பொறுப்பாளர் டூ விலங்கு நல ஆர்வலர்… அனந்த் அம்பானி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

இதற்கிடையே, இன்று இரவு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் அனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தில் அரசியல், வணிகம் மற்றும் கலை உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டுமின்றி, சர்வதேச விருந்தினர்களும் கலந்து கொள்கின்றனர். புகழ்பெற்ற கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோரின் பங்கேற்பும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த தொழிலதிபரான முகேஷ் அம்பானி ஆகியோரின் ஒருங்கிணைப்பு சக்திக்கு இந்த திருமணம் ஒரு சான்றாக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

You may also like

© RajTamil Network – 2024