கூலி – இணையத்தில் கசிந்த படப்பிடிப்பு காட்சி!

by rajtamil
Published: Updated: 0 comment 1 views
A+A-
Reset

நடிகர் ரஜினியின் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது.

ரஜினியின் 171 – வது திரைப்படமாக தயாராகி வரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தங்கத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு டீசர் வெளியிடப்பட்டது. இதனால், இப்படம் தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் நாகர்ஜுனாவை வைத்து படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. மிகுந்த கவனத்துடன் செல்போன்களை வாங்கி வைத்த பின்பே படப்பிடிப்பு பகுதிக்கு துணை நடிகர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.

உங்க பையன் மட்டும் நல்லா இருக்கணுமா? ரசிகர் மன்ற நடிகர்களை விளாசிய அரவிந்த் சாமி!

அப்படியிருக்கையில், யாரோ ஒருவர் தன் செல்போனில் படப்பிடிப்பு காட்சிகளை விடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024