Sunday, September 22, 2024

கேஜரிவாலின் ஜாமீன் ஹரியாணா தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது: காங்கிரஸ்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததால் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா தெரிவித்தார்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முதல்வர் கேஜரிவிலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் இனிப்பு பரிமாறி தனது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

நேர்மையான தலைவரை சிறையில் அடைத்ததற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆம் ஆத்மி!

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜாமீனும் தேர்தலும் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். இது நீதிமன்றத்தின் நடைமுறை. அரசு நடவடிக்கை எடுத்து, கைது செய்து சிறையில் அடைத்தது. ஒரு இந்தியக் குடிமகனைப் போலவே அவர் நீதிமன்றத்துக்குச் சென்றார், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஹரியாணா தேர்தலுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது நிச்சயம் ஹரியாணா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

வரம் தரும் வாரம்

நீதிமன்றம் இன்னும் சற்று சுறுசுறுப்பாகவும் சரியான நேரத்திலும் செயல்பட வேண்டும் என்று நீதிமன்றத்துக்கு எனது கனிவான வேண்டுகோள். உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு அவர்களைப் பாதிக்குமா இல்லையா என்பதைக் காலம் தான் உணர்த்தும். எந்த ஒரு விஷயத்திலும் நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு செயலில் ஈடுபட்டால், அனைத்து நிறுவனங்களின் தவறான பயன்பாடும் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று அவர் கூறினார்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கான ஆரம்பப் பேச்சு இருந்தபோதிலும், சமரசம் எட்டப்படாத நிலையில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு தனித்தனி வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024