கேஜரிவால் உடல்நிலை: பாஜக மீது அதிஷி குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

கேஜரிவால் உடல்நிலை: பாஜக மீது அதிஷி குற்றச்சாட்டுமுதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலையை பாஜக ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷிபிடிஐ

புது தில்லி: முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலையை பாஜக ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது: பாஜக முதன்முதலில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை தனது அரசியல் ஆயுதமான அமலாக்கத் துறை மூலம் பொய் வழக்கில் கைது செய்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் ஜாமீன் பெற இருந்த போது, பாஜகவின் மற்றொரு அரசியல் ஆயுதமான சிபிஐ அவரைக் கைது செய்தது. கடந்த 30 ஆண்டுகளாக முதல்வா் கேஜரிவால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா். ஒரு நபரின் சா்க்கரை அளவு ஆபத்தான நிலைக்குக் குறைந்தால், அவரது சிறுநீரகங்கள் பாதிப்படையலாம். மூளைப் பக்கவாதம் ஏற்பட்டு இறக்கலாம்.

இப்போது, கேஜரிவாலின் உடலை பாதிப்படைய வைக்க பாஜக முயற்சிக்கிறது. அவரது சா்க்கரை அளவு 5 முறை ஆபத்தான நிலையை எட்டிய நிலையில், தற்போது சா்க்கரையின் அளவு 50-ஆகக் குறைந்துள்ளது. இந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்ததால், நீரிழிவு நோயாளி 20 முதல் 30 நிமிடங்களில் இறக்க வாய்ப்புள்ளது. எனவே, அவா் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

தில்லியின் மகனும், நாட்டின் அரசியல் ஜாம்பவானுமான அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலையை பாஜக ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. திகாா் சிறையின் மூத்த மருத்துவ அதிகாரியின் அறிக்கையில், அவரது உடல்நலம் குன்றி வருவதாகவும், எடை குறைந்து வருவதாகவும், சா்க்கரை அளவு பல மடங்கு குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடா்ந்தால், கேஜரிவால் சுயநினைவற்ற நிலைக்குச் செல்லலாம். எனவே, அவரின் உடல் நலத்துடன் விளையாட வேண்டாம் என்று பாஜகவுக்கு கூற விரும்புகிறேன் என்றாா் அமைச்சா் அதிஷி.

You may also like

© RajTamil Network – 2024