Tuesday, September 24, 2024

கேஜரிவால் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

கலால் கொள்கை ஊழல் வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிபிஐ சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு மற்றும் கேஜரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

தடைகளைத் தவிடு பொடியாக்கும் விக்னேஸ்வரன்!

கலால் கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனித்தனி மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

ஆம் ஆத்மி தலைவரை ஜூன் 26ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. தில்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல்வரைக் கைது செய்ததை சட்டப்பூர்வமாக உறுதி செய்தது. மேலும் சிபிஐ செய்த செயல்களில் எந்தவிதமான துரோகமும் இல்லை என்று கூறியது.

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

தில்லி துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து, 2022ல் கலால் கொள்கை ரத்து செய்யப்பட்டது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, கலால் கொள்கையை மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் மற்றும் உரிமதாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டன. இதனடிப்படையில் ஆம் ஆத்மியில் முதல்வர் உள்ளிட்ட சிலரைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024