Tuesday, September 24, 2024

கேப்டனாக ஷுப்மன் கில்லின் புதிய சாதனை!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

கேப்டனாக ஷுப்மன் கில்லின் புதிய சாதனை!வெளிநாட்டில் விளையாடிய டி20 தொடரில், தொடர்ந்து 4 போட்டிகளில் சூப்பர் ஓவர் இல்லாமல் வெற்றியை பதிவு செய்த முதல் கேப்டன்.சுப்மன் கில்சுப்மன் கில்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உலகக் கோப்பை வென்றவுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி அந்நாட்டு பயணம் மேற்கொண்டது.

முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, அடுத்த 4 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் பங்கேற்ற டி20 தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த தொடரில் முதல் 4 போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக இருந்த நிலையில், 5-வது போட்டியில் அவர் விளையாடாததால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.

மேலும், அந்த தொடரில் இரண்டு போட்டிகள் டையில் முடிந்து, சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024