கேம்லின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

கேம்லின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்!1931 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது கேம்லின் நிறுவனம்.சுபாஷ் தண்டேகர்

கேம்லின் ஃபைன் சயின்ஸ் மற்றும் ஸ்டேஷனரி நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான சுபாஷ் தண்டேகர் திங்கள்கிழமை காலமானார்.

மும்பையில் வசித்து வந்த சுபாஷ் தண்டேகர்(வயது 85) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இவரது இறுதிச் சடங்கில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டும் பங்கேற்ற நிலையில், தகனம் செய்யப்பட்டது.

சுபாஷ் தண்டேகரின் மறைவுக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1931 ஆம் ஆண்டு சுபாஷ் தண்டேகர், தனது சகோதரருடன் இணைந்து கேம்லின் நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் பேனா மைகளை மட்டுமே தயாரித்து வந்த நிலையில், படிப்படியாக பல்வேறு பொருள்களை தயாரிக்க தொடங்கி இந்தியாவின் முன்னணி நிறுவனமாக உருவெடுத்தது.

பள்ளிக் குழந்தைகள் கணிதப் பாடத்துக்கு உபயோகிக்கும் ஜியோமெட்ரி பாக்ஸை உருவாக்கியதில் பெரும் பங்கு சுபாஷ் தண்டேகருக்கு உள்ளது.

2011 ஆம் ஆண்டில், ஜப்பானிய ஸ்டேஷனரி நிறுவனமான கோகுயோ நிறுவனம் கேம்லினின் 50.74 சதவிகித பங்குகளை ரூ. 366 கோடிக்கு வாங்கியது.

கோகுயோ கேம்லின் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகும், தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைவராக சுபாஷ் தண்டேகர் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024