Saturday, September 21, 2024

கேரளாவில் விஸ்வரூபம் எடுத்த பாலியல் புகார்: பாஜகவின் நிலைப்பாடு என்ன?

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

மலையாள திரையுலகில் விஸ்வரூபம் எடுத்துள்ள நடிகைகளின் பாலியல் புகார்கள்… பாஜகவின் நிலைப்பாடு என்ன?மலையாள திரையுலகில் விஸ்வரூபம் எடுத்துள்ள நடிகைகளின் பாலியல் புகார்கள்... பாஜகவின் நிலைப்பாடு என்ன?

பாலியல் புகாருக்கு உள்ளான நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷுக்கு மறைமுக ஆதரவளிக்கும் வகையில் பாஜக எம்.பி.யும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி கருத்து தெரிவித்திருந்த நிலையில், கேரள மாநில பாஜக முகேஷுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னெடுத்துள்ளது.

கேரள அரசு நியமித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில், கேரளாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது நடிகைகள் பலரும் அடுத்தடுத்து பாலியல் புகார்களை முன்வைத்து வருகின்றனர். இதில் 40 ஆண்டுகளாக கேரள திரை உலகில் கோலோச்சும் நடிகரான முகேஷ் மீது மூன்று நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ. பொறுப்பில் இருந்து முகேஷ் விலக வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான பாஜக குரல் கொடுத்தது.

விளம்பரம்

இந்த நிலையில் தான் கேரள திரைத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பாஜக எம்.பி. சுரேஷ் கோபியிடம் முகேஷ் பதவி விலக வேண்டுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சுரேஷ் கோபி கூறியதாவது, நடிகர்கள் மீதான பாலியல் புகார் விவகாரத்தை கையில் எடுத்து கேரள ஊடகங்கள் பணம் சம்பாதிக்கவும், திரைத்துறையை நிலைகுலையச் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக விமர்சித்தார்.

நடிகர் முகேஷுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுரேஷ் கோபி பேசி இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அது அவரது சொந்தக் கருத்து. பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடிகர் முகேஷ், கொல்லம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே கேரள பாஜகவின் நிலைப்பாடு என்று பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. முகேஷை பதவி விலகச் சொல்லாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

விளம்பரம்

Also Read:
செக் மோசடி வழக்கில் பிரபல தென்னிந்திய நடிகைக்கு 3 மாத சிறை… ரூ. 40 லட்சம் அபராதம் விதிப்பு

மேலும், இந்த விவகாரத்தில் சக நடிகராக கருத்து தெரிவிக்க பாஜக எம்.பி. சுரேஷ் கோபிக்கு உரிமை இருந்தாலும், எம்.எல்.ஏ.வும் நடிகருமான முகேஷ் பதவி விலக வேண்டும் என்பது தான் கேரள பாஜகவின் நிலைப்பாடு என்று சுரேந்திரன் தெளிவுபடுத்தி உள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கை எதிரொலியாக கேரள திரையுலகில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதே நேரம், நடிகர் முகேஷ் விஷயத்தில் பாஜக இணை அமைச்சராக உள்ள சுரேஷ் கோபி ஒரு கருத்தையும், மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் அதற்கு எதிரான கருத்தையும் முன்வைத்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

இதற்கிடையே, திரைப்படக் கொள்கையை வகுப்பதற்கான கேரள அரசின் குழுவில் இருந்து நடிகர் முகேஷ் நீக்கப்பட்டார். நடிகைகள் சிலர் முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், இந்த நடவடிக்கையை கேரள மார்க்சிஸ்ட் அரசு எடுத்துள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
mollywood

You may also like

© RajTamil Network – 2024