Friday, September 20, 2024

கேரளா இளைஞர் காங்கிரஸினர் மீது போலீஸ் லத்தி சார்ஜ்! மண்டை உடைப்பு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

கேரளாவில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ்… கொடூரமாக தாக்கிய போலீஸ்கேரளாவில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ்... கொடூரமாக தாக்கிய போலீஸ்

ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் கேரள திரைத்துறையில் புயலைக் கிளப்பியுள்ளது. கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா ஆகியோர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதனை தொடர்ந்து மோகன்லால் தலைமையிலான மலையாள திரைக்கலைஞர்கள் சங்கத்தினர், ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டோவினோ தாமஸ், வினு மோகன், அனன்யா மற்றும் சரயு ஆகியோர் தாங்கள் தொடர்ந்து சங்கத்தில் நீடிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், மலையாள திரைக்கலைஞர்கள் சங்கத்தை கலைத்தது கோழைத்தனமான செயல் என்று நடிகை பார்வதி விமர்சித்திருந்தார்.

இப்படி கேரளாவில் திரைத்துறையில் எழுந்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் அரசுக்கு பெரும் நெருக்கடியை எழுப்பியுள்ள நிலையில் தற்போது ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு அரசியல் புயலை அந்த மாநிலத்தில் கிளப்பியுள்ளது.

விளம்பரம்

கேரளாவில் சுயேட்சை போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. அன்வர் தன் மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார் மேலும் தங்கக்கடத்தலில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார்.. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதகரமாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸும், பா.ஜ.கவும் கேரளாவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

அதன் ஒரு பகுதியாக இன்று கேரள இளைஞர் காங்கிரஸினர் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது அவர்கள், கேரளா தலைமை செயலகம் நோக்கி முன்னேறி அதனை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை கலைப்பதற்காக போலீஸார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். பிறகு அங்கு இருந்தவர்களை கலைப்பதற்காக போலீஸ் லத்தி சார்ஜ் செய்தனர். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. இந்த சம்பவம் கேரளாவில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Congress
,
CPM
,
kerala
,
Pinarayi vijayan

You may also like

© RajTamil Network – 2024