Wednesday, September 25, 2024

கேரள அரசின் குழுவில் இருந்து எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் நீக்கம்!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

திருவனந்தபுரம்: ‘ஹேமா குழு’ அறிக்கையின் தொடா்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களை மலையாள திரையுலகைச் சோ்ந்த பெண்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ்,கேரள அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கேரள அரசு சார்பில் கேரள படப்பிடிப்புக்கு ஏற்ற இடம் என்ற வகையில் கொள்கை வகுப்பதற்காக, கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இதில், நடிகரும் கொல்லம் சட்டப்பேரவை உறுப்பினருமான முகேஷ், மஞ்சு வாரியர், பத்மப்பிரியா, நிகிலா விமல் உள்ளிட்ட பத்து பேர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், ‘ஹேமா குழு’ அறிக்கையின் தொடா்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களை மலையாள திரையுலகைச் சோ்ந்த பெண்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட 4 முக்கிய மலையாள நடிகா்கள் மீது நடிகையொருவா் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறாா்.

நடிகையின் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, கொல்லத்தில் உள்ள முகேஷின் இல்லம் நோக்கி காங்கிரஸ் தொண்டா்கள் பேரணி சென்றனா். முகேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவா் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனவும் அவா்கள் கோஷமிட்டனா். இதுதொடா்பகாக முகேஷ் இதுவரை பதிலளிக்கவில்லை.

இதனிடையே, கேரளத் திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார்கள் எழுந்ததை அடுத்து நடிகர் மோகன்லால் தலைமையிலான திரைப்பட சங்க நிர்வாகிகள் குழு செவ்வாய்க்கிழமை கூண்டோடு ராஜிநாமா செய்வதாக அறிவித்தது.

பாலியல் புகாா்கள் எதிரொலி:
மலையாள நடிகா்கள் சங்கத் தலைவா் மோகன்லால், நிா்வாகிகள் ராஜிநாமா

இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் திரைப்படக் கொள்கை வகுப்புதற்கான கேரள அரசின் குழுவில் இருந்து நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளத் திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல், பாலியல் தொந்தரவு தரப்படுவதாக எழுந்த புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை அமைத்த காவல்துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் உள்ளிட்ட 8 பேர் மீது தனது புகார் தொடர்பான விவரங்களை நடிகை அளித்துள்ளார்.

இதுவரை 17 பேர் மீது புகார்கள் வந்துள்ளன.

You may also like

© RajTamil Network – 2024