கேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

கேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் நிதியுதவி… பிரதமர் அறிவிப்பு !பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கேரளாவின் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கேரளாவின் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கிய நிலையில் 1000-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை பகுதியில் உள்ள அணை நிரம்பிய நிலையில் அனையின் நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

வயநாடு பகுதில் தொடர்ந்து பெய்த கனமழையால் சூரல் மலை பகுதியில் லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டு வந்தன. இதனால் மக்களுக்கு தொடர்ந்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.

மேலும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Heavy rain
,
kerala
,
Wayanad

You may also like

© RajTamil Network – 2024