கே.பி.முனுசாமி ‘திடீர்’ சாலை மறியல்!

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.முனுசாமி , அரசு திட்டங்களை தொடங்கி வைக்க திமுகவினரிடையே எதிர்ப்பு எழுந்ததால், அவர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வேப்பனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி முனுசாமி, புதன்கிழமை தனது தொகுதிக்குட்பட்ட சூளகிரி வட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

அப்போது, அங்கிருந்த திமுகவினர் கே.பி.முனுசாமி திட்டத்தை தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் அங்குள்ள அதிமுகவினர், திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கே.பி.முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதனால், சுமார் 1 மணி நேரமாக அந்த பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திமுகவினர் தரப்பில் ஏற்கனவே பூஜை போட்டுவிட்டதாகவும், இது சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படவில்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரம், திட்டத்திற்கான நிதி யாருடையதாக இருந்தாலும், நான் இந்த தொகுதி மக்கள் பிரதிநிதி. அதனால், தன்னை பூமி பூஜை போடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என கே.பி.முனுசாமி கூறி வருகிறார். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. காவல்துறையினர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக, தவெக பங்கேற்கலாமா? – திருமாவளவன் விளக்கம்

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில், வேப்பனஹள்ளி தொகுதி சட்டப்பேரைவ உறுப்பினரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியை திமுகவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க விடாமல் அராஜகம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அரசின் திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்துகொள்வது மரபு.

ஆனால், அரசியல் நாகரிகம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல், அதிகார மமதையில் எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினரை அவமதிக்கும் வகையில் அராஜகப் போக்குடன் செயல்படும் திமுகவின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024