Tuesday, September 24, 2024

கைகோர்த்தால் போதும்.. இந்த கிராமத்தில் மட்டும் மழை பெய்யும்..!!

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

கைகோர்த்தால் போதும்.. இந்த கிராமத்தில் மட்டும் மழை பெய்யும்..!!பைல் படம்

பைல் படம்

ஆந்திராவில் பெய்த மழையால் விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை தங்கள் வயல்களில் பயிரிட்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் வயல்களில் மக்காச்சோளம், பருத்தி, கரும்பு, உளுத்தம் பருப்பு, உளுந்து போன்ற பயிர்களை சாகுபடி செய்திருந்தாலும், போதிய பருவமழை மழை பெய்யாததால், பயிர்கள் முற்றிலும் கருகி வருகின்றன, இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர்.

போதிய மழை இல்லாததால் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால், மழை வேண்டி பல கிராமங்களில் உள்ள மக்கள் கங்கம்மா அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். இதனால் மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இந்த கிராமத்தில் கங்கம்மா திருவிழா நடத்தினால் அதிக மழை பெய்யும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

விளம்பரம்

நந்தியாலா மாவட்டத்தில் உள்ள ஜூபாடு பங்களா மண்டலத்தில் தாரிகோபுலா கிராமத்திலிருந்து ராமசமுத்திரம் செல்லும் சாலையில் கங்கம்மா கோயில் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் மழை வேண்டி கங்கம்மா திருவிழா நடத்தினால் கண்டிப்பாக மழை பெய்யும் என்று அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர்.

இது குறித்து விவசாயிகளான லட்சுமண கவுட், சீனிவாசல் ஆகியோர் கூறியதாவது, எங்கள் கிராமத்தில் மழை பெய்யாவிட்டால், உடனே கங்கம்மா ஜாதரா பூஜை நடத்துவது வழக்கம். கங்கம்மா கோவிலுக்கு வந்து அன்னம் படைத்தது, மாவிளக்கு செய்து அதில் தீபம் ஏற்றி மழை பெய்ய வேண்டும் என்று அம்மனை கைகோர்த்து மனம் உருகி வேண்டிக் கொண்டால் கண்டிப்பாக அதிக மழை பெய்யும்.

விளம்பரம்

சிறுவயதில் இருந்தே இந்த வழக்கத்தை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். சில நாட்களாக போதிய மழை பெய்ததால் இந்த திருவிழா நடத்தவில்லை, அனால் தற்போது போதிய மழை இல்லாததால், பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மழை பெய்வதற்காக கங்கம்மா திருவிழா நடத்த உள்ளதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். கங்கம்மா திருவிழா நடத்துவதற்கு முன், நங்கள் கிராமம் முழுவதும் மக்களிடம் பிச்சை எடுத்து, சமையலுக்கான பொருட்களை சேகரித்து வந்ததாக கூறியுள்ளனர். அதில் ஒரு சிலர் அரிசி, பருப்பு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை தருவார்கள், மற்றவர்கள் பணம் தருவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, கிராமத்தில் ஒவ்வொரு முறை கங்கம்மா திருவிழா நடக்கும் போதும் மழை பெய்து வருகிறது. தங்கள் கிராமத்தில் முன்னோர்களின் பாரம்பரியத்தை தொடர்ந்து செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கங்கம்மா திருவிழா முடிந்து 2 முதல் 3 நாட்களுக்குள் கண்டிப்பாக மழை பெய்யும் என்றும் தரிகோபுல கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Heavy rain

You may also like

© RajTamil Network – 2024