கொலை வழக்கில் கைதானவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கியதாக கூறி என்கவுண்டர் செய்வது தி.மு.க. ஆட்சியில் அதிகரித்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

காஞ்சிபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் கைதானவர்கள் மீது காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

தவறு செய்ததாக குற்றம் சாட்டப்படும் எவரையும் கைது செய்து முறையாக விசாரித்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தர வேண்டுமே தவிர, காவல்துறையே நீதிபரிபாலனத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல.

குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்மூடித்தனமாக தாக்குவதும், தங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கியதாக கூறி என்கவுண்டர் செய்வது போன்ற சூழ்நிலைகள் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அதிகரித்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு காவல்துறை ஆய்வாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் கைதானவர்கள் மீது காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.தவறு செய்ததாக குற்றம் சாட்டப்படும் எவரையும் கைது செய்து முறையாக…

— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) September 25, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024