கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை – மருத்துவமனை முன்னாள் தலைவர் சஸ்பெண்ட்

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை… மருத்துவமனையின் முன்னாள் தலைவர் சஸ்பெண்ட்!

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை வழக்கில் விசாரணைக்கு உள்ளான சந்தீப் கோஷ் இந்திய மருத்துவர்கள் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இது தொடர்பாக, சஞ்சய் ராய் எனபவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கை, சிபிஐ விசாரித்து வருகிறது.

இதையும் படிக்க:Reliance AGM 2024: “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வெற்றிகரமான மாற்றம் வரப்போகிறது” – முகேஷ் அம்பானி

விளம்பரம்

இதற்கிடையே மருத்துவமனையில் பணியாற்றிய டீன் சந்தீப் கோஷிடம் சிபிஐ போலீசார் நடத்திய விசாரணையில் அவர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சந்தீப் கோஷை ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News
,
Kolkata Doctor Murder Rape
,
murder case

Related posts

Indian Army is developing indigenous Sensor Fuzed Munitions

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்