Tuesday, September 24, 2024

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு மறுநாள்.. சந்தீப் கோஷ் போட்ட உத்தரவு!

by rajtamil
Published: Updated: 0 comment 6 views
A+A-
Reset

கொல்கத்தா: கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த மறுநாள், மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பிறப்பித்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் மருத்துவர் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்துக்கு அருகே உள்ள பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு, சந்தீப் கோஷ், மாநில பொதுப் பணித் துறைக்கு தெரிவித்திருப்பதாக, மருத்துவமனை ஆவணங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

அதாவது, மருத்துவமனையில் நடந்த சோதனையில், கொலை நடந்த கருத்தரங்கு அறையை ஒட்டியிருக்கும் அறை மற்றும் கழிப்பறையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு பொதுப்பணித் துறைக்கு, சந்தீப் கோஷ் அனுமதி அளித்த கடிதத்தை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பது இந்த வழக்கில் மிக முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

என்று மாறும் இந்த நிலை? மகன்களின் உடலை தோளில் சுமந்துசென்ற பெற்றோர்

அதாவது, அனுமதிக் கடிதமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி கையெழுத்திடப்பட்டுள்ளது. முன்னதாக, சம்பவப் பகுதியில் அடுத்த நாளே சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது பெரும் சந்தேகத்தை எழுப்பியிருந்த நிலையில், அதற்கு சந்தீப் கோஷ்தான் உத்தரவிட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஆகஸ்ட் 13ஆம் தேதி மாலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட அதே நேரத்தில், பொதுப் பணித் துறை ஊழியர்கள், மருத்துவமனையின் சம்பவப் பகுதியில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டிருந்தனர். அங்குதான் ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அறிந்த மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்ததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடந்த வழக்கில், சந்தீப் கோஷ் தற்போது கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024