கொல்கத்தா மருத்துவமனை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

by rajtamil
Published: Updated: 0 comment 12 views
A+A-
Reset

கொல்கத்தாவில் ஆா்.ஜி. கா் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டு, கடந்த மாதம் 9-ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், பெண் மருத்துவா் பாலியல் கொலை சம்பவத்தில் சிபிஐ-யின் விசாரணை வளையத்தில் உள்ள சந்தீப் கோஷ் மீது நிதி முறைகேடு புகாரும் எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் அவா் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கைதான முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷை 8 நாள்கள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. அவரை 8 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், நிதி முறைகேடு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சந்தீப் கோஷ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சிபிஐ விசாரணையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் செப். 6-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024