கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

சடலத்தை எரித்து 3 மணி நேரம் ஆன பின்னர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது ஏன்? கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விஉச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், மேற்கு வங்க அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த பணிக்குழுவை அமைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மேற்கு வங்க அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் ஆஜராகினர். அப்போது, கொல்லப்பட்ட மாணவியின் பெயர், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை ஊடகங்களில் வெளிவந்ததற்கு தலைமை நீதிபதி கவலை தெரிவித்தார். மாணவியின் மரணத்தை தற்கொலை வழக்காக மாற்ற மருத்துவக் கல்லூரியின் முதல்வர் முயன்றதாகவும் தலைமை நீதிபதி குற்றம் சாட்டினார்.

விளம்பரம்

மேலும் தெரிந்துகொள்ள:
என்ன நடக்கிறது கொல்கத்தா மருத்துவ மாணவி வழக்கில்?

மேலும் மேற்கு வங்க அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்த தலைமை நீதிபதி சடலத்தை எரித்து 3 மணி நேரம் கழித்து எஃப்ஐஆர் பதிவு செய்தது ஏன்? கல்லூரியின் முதல்வர் என்ன செய்துக்கொண்டிருந்தார்? சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைப்பதில் ஏன் காலதாமதம் ஆனது? பாதுகாப்பு வளையத்தில் இருந்த மருத்துவமனை எப்படி அடித்து நொறுக்கப்பட்டது? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த, மேற்கு வங்க அரசு தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல், மர்ம மரணம் என்ற ரீதியில் உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டதாகவும், மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டதாகவும் கூறினார். எனினும் மேற்கு வங்க அரசின் செயலுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

விளம்பரம்

வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தனது அறிக்கையை நீதிமன்றத்தில் நாளை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள பணிக்குழு அமைத்து ஆணை பிறப்பித்தனர்.

இதையும் படிக்க:
இளம்பெண்கள் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் – உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தப் பணிக்குழுவில், அறுவை சிகிச்சை நிபுணர் துணை அட்மிரல் ஆர்டி சரின், மருத்துவர்கள் டி நாகேஷ்வர் ரெட்டி, எம் ஸ்ரீனிவாஸ், பிரதிமா மூர்த்தி உள்ளிட்ட 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

விளம்பரம்

பணிக்குழுவின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக மத்திய அரசின் கேபினட் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதார செயலாளர், தேசிய மருத்துவ ஆணைய தலைவர், தேசிய தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோர் இருப்பார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 2 வார காலத்தில் இடைக்கால அறிக்கையும், 2 மாதங்களில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்ய பணிக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொட்டபெட்டா போக பிளான் போட்டு இருக்கீங்களா… அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்.!
மேலும் செய்திகள்…

மருத்துவமனைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விரிவான விசாரணை நடைபெறும் என்றும் கூறியுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
kolkata
,
Kolkata Doctor Murder Rape
,
Medical College
,
sexual harassment
,
sexually harrassed

You may also like

© RajTamil Network – 2024