Friday, September 20, 2024

‘கோட்’ படத்தின் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

‘கோட்’ படத்தின் ஸ்பெஷல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியிடப் போவதாகவும். அப்பாடலில் நடிகை திரிஷா மற்றும் விஜய் இணைந்து ஆடி இருப்பதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'கோட்'. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 'கோட்' படத்தின் டிரைலர் 17ம் தேதி வெளியானது. இந்த டிரெய்லரில் தந்தை, மகன் என 2 கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. துப்பாக்கி சண்டை, கார் சேசிங், மோட்டார் சைக்கிளில் பறப்பது போன்ற சாகச காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளன.

படத்தின் டிரெய்லர் யூடியூபில் தற்போது வரை டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. கோட் படத்தின் டிரெய்லரை 5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதுக் குறித்து வெங்கட் பிரபு சுவாரசியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். கோட் படத்தின் ஸ்பெஷல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியிடப் போவதாகவும். அப்பாடலில் நடிகை திரிஷா மற்றும் விஜய் இணைந்து ஆடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் வரும் 31ம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் விஜய் மற்றும் திரிஷா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

'கோட்'. திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024