கோரமண்டல் ஆலையை மீண்டும் திறக்க கையூட்டு கொடுத்து மக்களை விலைக்கு வாங்கியதாக புகார்: விசாரணை கோரும் அன்புமணி, சீமான்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

கோரமண்டல் ஆலையை மீண்டும் திறக்க கையூட்டு கொடுத்து மக்களை விலைக்கு வாங்கியதாக புகார்: விசாரணை கோரும் அன்புமணி, சீமான்

சென்னை: கோரமண்டல் அமோனியா ஆலை விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

அன்புமணி: அமோனியா வாயுக்கசிவு காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த எண்ணூர் கோரமண்டல் அமோனியா ஆலை, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட திரைமறைவு நடவடிக்கைகள் குறித்து வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஆலையை நிரந்தரமாக மூட வலிறுத்தி போராடிய மக்களை விலைக்கு வாங்கும் வகையில், அவர்களுக்கு கையூட்டு வழங்கப்பட்டுள்ளது. தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் கிராமங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதமும், பெரியகுப்பத்துக்கு ரூ.50 லட்சமும், சின்ன குப்பத்துக்கு ரூ.35 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள கிராமக்குழுக்களில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதமும், கைம்பெண்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதை தமிழக அரசு அமைதியாக வேடிக்கை பார்ப்பது சரியல்ல. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.

சீமான்: எண்ணூர் கோரமண்டல் ஆலையை எதிர்த்து போராடும் மக்களின் கோரிக்கைகளையும், குரலையும் நசுக்கும் விதமாக அவர்களை வலுக்கட்டாயமாக விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் கோரமண்டல் ஆலை இறங்கியுள்ளது. இது அப்பட்டமான மக்களாட்சிக்கு எதிரான போக்காகும்.

இவ்விவகாரத்தில் தமிழக அரசும் அமைதிகாப்பது, ஆலை திறப்பதற்கு அரசே துணைபோவதாக வரக்கூடிய செய்தியை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது. எனவே ஆலை நிர்வாகத்தின் மீதும், அதற்கு துணைபுரியும் நபர்களின் மீதும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

You may also like

© RajTamil Network – 2024