3
பெங்களூரு,
கர்நாடகாவில் உள்ள 34 ஆயிரம் கோவில்களில் பிரசாதம் மற்றும் விளக்குகளுக்கு, அரசின் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அறநிலையத்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களுக்கு நந்தினி நெய்யை பயன்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் கர்நாடக அறநிலையத்துறை இந்த உத்தரவை பிறப்பித்த்துள்ளது. கர்நாடக அரசு சார்பாக நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருப்பதி லட்டுக்கும் கர்நாடகாவின் நந்தினி நெய் முன்னதாக அனுப்பப்பட்டு வந்தது. கடந்த 8 மாதமாக நந்தினி நெய்யை திருப்பதி தேவஸ்தானம் வாங்குவதை நிறுத்தியது.