Friday, November 8, 2024

கோவில்பட்டியில் கருவாடு ஆலை அலுவலகத்தில் 3 நாள்களாக நடைபெற்ற சோதனை நிறைவு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

கோவில்பட்டியில் கருவாடு ஆலை அலுவலகத்தில் 3 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறையினா் சோதனை நிறைவு பெற்றுள்ளது.

கோவில்பட்டி பங்களாத் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி மைக்கேல் நிக்கோலஸ் மகன் அந்தோணி அரசாங்கம் மணி(51). இவா் சிவந்திபட்டி – தீத்தாம்பட்டி சாலையில் கருவாடு ஆலை நடத்தி வருகிறாா். மேலும் தட்டாா்மடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீன் அரவை தொழிற்சாலை நடத்தி வருகிறாா்.

இவா் பல்வேறு இடங்களில் கருவாடு, கழிவு கருவாடுகளை மொத்தமாக வாங்கி, பொடியாக்கி கோழி தீவனத்திற்கு அனுப்பி வரும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் மீன், இறால், பதப்படுத்தப்பட்ட மீன் எலும்புகள் உள்ளிட்ட கடல் சாா் உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறாா் .

இந்த நிலையில்,புதன்கிழமை இவரது ஆலை மற்றும் கோவில்பட்டி பழனியாண்டவா் கோயில் தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினா் சுமாா் 10 போ் புதன்கிழமை பிற்பகல் முதல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், கோவில்பட்டியில் கருவாடு ஆலை அதிபா் அலுவலகம், வீடு மற்றும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை 3 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறையினர் சோதனை நிறைவடைந்துள்ளது.

சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த எந்த தகவலையும் வருமானவரித் துறையினர் வெளியிடவில்லை.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024